;
Athirady Tamil News

ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க போர்க்கப்பலை அனுப்புங்கள்; சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு டிரம்ப் கோரிக்கை

0

வாஷிங்டன்,

மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தால் ஈரான் அந்நாட்டில் உள்ள ‘ஹார்முஸ்’ ஜலசந்தியை மூடியுள்ளது, இதனால் அதன் வழியாக கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் கடும் எரிபொருள் தட்டுப்பாட்டை சந்தித்து வருகின்றன. இந்த நிலையில் கச்சா எண்ணெய் தொடர்ந்து கிடைக்க வேண்டுமானால் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதன் காரணமாக பாதிக்கப்பட்ட நாடுகள் தங்களது போர்க்கப்பலை அங்கு அனுப்ப வேண்டும் என அமெரிக்க ஜனாதி பதி டிரம்ப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக டிரம்ப் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ஈரான் தோற்கடிக்கப்பட்டாலும் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் ஏவுகணை, டிரோன்கள் கொண்டு தாக்கி அப்பகுதிகளில் கப்பல்களை செல்ல விடாமல் தடுக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே சீனா, பிரான்ஸ், ஜப் பான், தென் கொரியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் ஹார்முஸ் ஜலசந் தியை பாதுக்காப்பதற்காக அங்கு தங்களது போர்கப்பல்களை அனுப்ப வேண்டும் என்று குறிப்பிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.