;
Athirady Tamil News

களூவாஞ்சிக்குடி பகுதிக்கு அத்துமீறிய தனியன் யானை

0

தனியன் யானை ஒன்று அத்துமீறி நுழைந்து கடுமையான சேதங்களை ஏற்படுத்தி வருவதாக களுவாஞ்சிக்குடி பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த தனியன் யானையின் அச்சுறுத்தல் இன்று இரவு வரை ஏற்பட்டுள்ளதாகவும் பயிர் நிலங்கள் வளவுகள் மட்டுமன்றி வர்த்தக நிலையத்தையும் உடைத்து சேதப்படுத்தியதாக குறிப்பிட்டனர்.

மேலும் அந்தப் பகுதியில் மின்விளக்குகள் இன்மையினால் மக்கள் குறித்த யானையை காட்டுக்குள் விரட்டுவதில் அதிக சிரமங்களை எதிர்கொண்டதுடன் அதிகாலை 7 மணி வரை மக்களை அச்சுறுத்தும் வகையில் யானைகளின் நடமாட்டம் காணப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டிருந்தாலும் இதுவரை எந்தவொரு நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

அண்மைக்காலமாக யானைகள் இப்பகுதியில் சஞ்சாரம் செய்து வருவதாக பொதுமக்கள் குறிப்பிட்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.