;
Athirady Tamil News

காட்டு யானை தாக்கியதில் வயலுக்கு சென்றவர் பலி

0

சூரியபுர, ஜனசவிவெவ பகுதியில் காட்டு யானை தாக்கியதில் 45 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளார். வான்எல பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் மற்றொருவருடன் வயல்வெளிக்குச் சென்றிருந்தபோது, திடீரென காட்டு யானை தாக்கியதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தாக்குதலில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பில் சூரியபுர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.