;
Athirady Tamil News

ஒட்டகப்புலம் காணி விடுவிப்புக்கான ஆவணம் கையளிப்பு

0

தெல்லிப்பளை J/244 வசாவிளான் கிழக்கு பிரதேசத்திலுள்ள இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்டு வந்த 2 ஏக்கர் காணி விடுவிப்பு

தெல்லிப்பளை J/244 வசாவிளான் கிழக்கு பிரதேசத்திலுள்ள இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்டு வந்த 2 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டு, விடுவிக்கப்பட்டமைக்கான உத்தியோகபூர்வ ஆவணம் யாழ்ப்பாண மாவட்ட அச்சுவேலி ஒட்டகப்புலம் 511 பிரிகேட்டின் கேணல் பி.எம்.சி. வன்னிநாயக்க அவர்களினால் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களிடம் இன்றைய தினம் (23.03.2026) அரசாங்க அதிபர் அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் க.சிவகரன் மற்றும் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) பா. ஜெயகரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.