புத்தாண்டுக்கு முன்னர் வெளிவரவுள்ள உயர்தரப் பரீட்சைப் பெறுபேறு முடிவு
2025 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைப் பெறுபேறு முடிவுகளை, சித்திரைப் புத்தாண்டுக்கு முன்னதாக வெளியிடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
பெறுபேறுகளை வெளியிடுவதற்கான இறுதி கட்டத் தயாரிப்புப் பணிகள் தற்போது துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
கடந்த நவம்பர் 10ஆம் திகதி ஆரம்பமான உயர்தரப் பரீட்சைகள், இடையில் ஏற்பட்ட ‘டிட்வா’ புயல் காரணமாகப் பாதிக்கப்பட்டிருந்தது.
இதனால் ஒத்திவைக்கப்பட்ட சில பாடங்களுக்கான பரீட்சைகள், கடந்த ஜனவரி 12 முதல் 20 வரை மீள நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.