;
Athirady Tamil News

அகவை நாளில் மழலைகளின் அத்தியாவசிய தேவைக்கு உதவி வழங்கிய, சுவிஸ் புங்குடுதீவு செல்வி சுதாகரன்.. (வீடியோ, படங்கள்)

0

அகவை நாளில் மழலைகளின் அத்தியாவசிய தேவைக்கு உதவி வழங்கிய, சுவிஸ் புங்குடுதீவு செல்வி சுதாகரன்.. (வீடியோ, படங்கள்)
######################

புங்கையூர் செல்வியே,
புன்சிரிப்பு நாயகியே
ஊர் ஒன்றியத்தின் செயல்வீரராய்
ஒளி வீசும் அற்புதமே..

மேல்மருவட்டத்தூர் அம்மன் மீது,
பேரன்பு கொண்டு வாழும்
சுதாகரன் செலவியரே..

இன்றைய பிறந்தநாளில்
இங்கிதமான நல் வாழ்த்துக்கள்..

இன்றைய நாளில் சுவிஸ் நாட்டில் பிறந்தநாள் காணும் செல்வி என அன்பாக எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் திருமதி. சுதாகரன் கிருபாதேவி அவர்கள் தனது நிதிப் பங்களிப்பில் “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினூடாக” மழலைகளுக்கு கற்றல் உதவி வழங்கி வைத்தார்.

திரு.திருமதி சுதாகரன் செல்வி தம்பதிகள் தங்களின் குடும்பத்தின் எந்தவொரு நிகழ்வுகளையும் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினூடாக தாயக உறவுகளுக்கு உதவிகள் வழங்கி தொடர்ச்சியாக சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி தாங்கள் வாழும் சுவிஸ் தேசத்திலே பல்வேறு சமய, சமூகநல அமைப்புக்களின் நிர்வாகப் பொறுப்பிலிருந்து தன்னார்வத் தொண்டுகளையும், சமயத் தொண்டுகளையும் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் இன்றைய பிறந்தநாள் காணும் செல்வி என அன்புடன் அழைக்கப்படும் திருமதி.கிருபாதேவி சுதாகரன் பிறந்தநாள் நிகழ்வானது முதலில் மாணவர்களினால் அவரது பிறந்தநாளை கொண்டாடும் முகமாக கேக் வெட்டி பிறந்தநாள் பாட்டுப்பாடி தமது பிறந்த நாள் வாழ்த்தினையும் மகிழ்ச்சியினையும் தெரிவித்துக் கொண்டனர்.

சுவிஸ்லாந்தில் வசிக்கும் செல்வி அவர்களின் பிறந்ததினத்தை முன்னிட்டு வறுமையில்கோட்ப்பட்ட வவுனியா கூமான்குளம் முன்பள்ளிப் பாடசாலையின் மாணவமாணவிகளுக்கு கற்றலுக்கான தேவைகருதி சித்திரை கொப்பி, சோக், பென்சில் வழங்கி வைக்கப்பட்டது சிறப்பான செயல்பாடாகும்.

முதல் நிகழ்வாக மாணவ சிறார்களும், பெற்றோர்கள் கலந்து கொண்டு சுவிஸ்லாந்தில் வசிக்கும் செல்வி அவர்களின் சார்பாக கேக் வெட்டி பிறந்த நாள் பாட்டுப்பாடி மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டது.

வவுனியா கூமான்குளம் முன்பள்ளியின் ஆசிரியர் திவாகர் டினோஷா அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஊடகவியலாளர் திரு.வரதராசா பிரதீபன் அவர்கள் நேரிய முறையில் ஒழுங்கமைபில் வவுனியா கூமான்குளம் முன்பள்ளியின் பொறுப்பாசிரியர் சாமிநாதன் பிரியந்தி தலைமையில் இடம்பெற்றது.

இறுதியாக இவ்வுதவியை பெற்றுக் கொண்ட மாணவமாணவிகள், ஆசிரியைகளினால் பிறந்தநாளைக் காணும் திருமதி.செல்வி சுதாகரன் குடும்பத்தினருக்கு நன்றியினைத் தெரிவித்துக் கொண்டதுடன், திருமதி.செல்வி சுதாகரன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்தையும் தெரிவித்துக் கொண்டனர்.

திருமதி சுதாகரன் செல்வி அவர்களுக்கு தாயக உறவுகளோடு மாணிக்கதாசன் நற்பணி மன்றம் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு, தொடர்ச்சியாக தாயக உறவுகளுக்கு மாணிக்கதாசன் நற்பணி மன்றமூடாக நிதிப்பங்களிப்பினை வழங்கி வருவதற்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி மன்றம்.. என்றும்
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

தலைமைச் செயலகம்.
மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.
வவுனியா, இலங்கை.
01.04 2026.

அகவை நாளில் மழலைகளின் அத்தியாவசிய தேவைக்கு உதவி வழங்கிய, சுவிஸ் புங்குடுதீவு செல்வி சுதாகரன்.. (வீடியோ)

 

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..
https://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வீடியோக்கள் அனைத்தையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்.. 

https://www.youtube.com/channel/UCcqovJhy5b-K7R3CrQz3dLg/videos

You might also like

Leave A Reply

Your email address will not be published.