;
Athirady Tamil News

கணவர் எடுத்த தவறான முடிவு: 17 வது மாடியிலிருந்து குதித்த மனைவி: பெங்களூரில் சோகம்

0

பெங்களூருவில் தொழில்நுட்ப துறையில் பணியாற்றி வந்த இளம் தம்பதியினர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவில் கடந்த திங்கட்கிழமை தெலுங்கானாவின் சித்திபேட்டை பகுதியைச் சேர்ந்த பானு சந்தர் ரெட்டி குந்தா என்ற 32 வயது நபர் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மென் பொறியாளரான பானு சந்தர் நீண்ட நேரமாக கதவை திறக்காததால் சந்தேகம் அடைந்த அவரது மனைவி பிபி ஷாஜியா சிராஜ், அக்கம் பக்கத்தினர் மற்றும் பாதுகாப்பு ஊழியர்களின் உதவியை நாடியுள்ளார்.

பின்னர் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்த போது கணவர் பானு சந்தர் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்து கிடந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த மனைவி பிபி ஷாஜியா சிராஜ் அடுத்த சில நிமிடங்களிலேயே 17 வது மாடியிலிருந்து குதித்து உயிரை மாய்த்து கொண்டுள்ளார்.

31 வயதான பிபி ஷாஜியா IBM நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.,

இந்த சம்பவத்தை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் இரண்டு தனித்தனி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தம்பதிகளுக்கு உடல்நல குறைவு ஏதுவும் இருந்ததா? தம்பதிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு அல்லது மன அழுத்தம் இருந்ததா என பல்வேறு கோணங்களில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.