;
Athirady Tamil News

ஈரானுக்கு கடைசி எச்சரிக்கை ; டிரம்ப் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

0

அமெரிக்கா – ஈரான் இடையிலான பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில், டொனால்ட் டிரம்ப் ஈரானுக்கு கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தனது ( ட்ரூத்) Truth Social சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஈரான் ஒரு இணக்கப்பாட்டிற்கு வருவதற்கும் அல்லது ஹோமுஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கும் இன்னும் சுமார் 48 மணித்தியாலங்களே எஞ்சியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

முன்னதாக இதற்காக ஈரானுக்கு 10 நாட்கள் அவகாசம் வழங்கியிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த அவகாசம் தற்போது முடிவை நெருங்கியுள்ளதாகவும், காலக்கெடு நிறைவடைந்த பின்னர் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

ஹோமுஸ் நீரிணையை உலகின் முக்கியமான கடல் வணிகப் பாதைகளில் ஒன்றாகும்.

உலகளாவிய எண்ணெய் ஏற்றுமதியின் குறிப்பிடத்தக்க பகுதி இந்த நீரிணை வழியாக நடைபெறுவதால், அது மூடப்படுவது சர்வதேச சந்தைகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.

இந்த நிலையில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான உறவு மேலும் பதற்றமடையும் சாத்தியம் இருப்பதாக சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.