;
Athirady Tamil News

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் உயிர்த்த ஞாயிறு விசேட ஆராதனை

0

மட்டக்களப்பில் சீயோன் தேவாலயத்தில் பலத்த பாதுக்கப்புக்கு மத்தியில் இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பை நினைவு கூரும் உயிர்த்த ஞாயிறு விசேட ஆராதனை இன்று (05) இடம்பெற்றது.

கடந்த 2019 ஏப்ரல் 21ம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று சீயோன் தேவாலயத்தில் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் அங்கு 30 பேர் உயிரிழந்தனர். 80 பேர் படுகாயமடைந்தனர்.

குறித்த தற்கொலை குண்டுதாக்குதல் இடம்பெற்று 6 வருடம் முடிந்தும் நீதி கிடைக்காத நிலையில் இன்று உயிர்த்த ஞாயிறு விசேட ஆராதனை இராணுவம் மற்றும் பொலிஸாரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தேவாலய போதகர் மகேசன் ரொசான் தலைமையில் இடம்பெற்றது.

இதில் ஆயிரகணக்கானோர் கலந்து கொண்டு வழிபாட்டில் ஈடுபட்டனர்.

இதேவேளை மாவட்டத்திலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் இந்த விசேட ஆராதனையிட்டு பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் விமானப்படையினர் பலத்த பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவருவது குறிப்பிடதக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.