கிளிநொச்சி மாவட்டத்தில் 2026ம் ஆண்டு சிறுபோக நெற்ச்செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு நில பண்படுத்தலுக்கு தேவையான டீசல் வழங்கும் பணி இன்று ஆரம்பிக்கப்பட்டது.
மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் கரைச்சி தெற்கு பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் வடபிராந்திய முகாமையாளர் சிவராமலிங்கம் சிவதரன் ,கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் D.குணசேகர,கிளிநொச்சி பொலிஸ் நிலையபொறுப்பதிகாரி முகமட் சுல்தான் நஜீம்,மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.மோகனபவன்,கரைச்சி பிரதேச செயலர் த.முகுந்தன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர் .
கமக்காரர் அமைப்புக்களின் சிபார்சு மூலம் கமநல சேவை நிலையங்களின் உறுதிப்படுத்திய பற்றுச்சீட்டுடன் ஏக்கருக்கு 30 லீற்றர் வழங்கப்படுகிறது.