;
Athirady Tamil News

தீவிரவாதிகள் என நினைத்து தனது நாட்டு மக்கள் 100 பேரை கொன்ற நைஜீரியா

0

நைஜீரியாவில் தீவிரவாதிகள் என நினைத்து தவறுதலாக அந்நாட்டு விமானப்படை தாக்குதல் நடத்தியதில் பொதுமக்கள் 100 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

நைஜீரியாவில் உள்ள யோபோ மாகாணத்தில் இந்த தாக்குதல் நடந்திருக்கிறது.. யோபோ மகாணத்துக்கு அருகேயுள்ள போர்னோ மாகாணம் கடந்த பல வருடங்களாகவே ஜிகாதி கிளர்ச்சியின் மையமாக செயல்பட்டு வருகிறது.

அந்த இடத்தில் தாக்குதல் நடத்த நைஜீரியா விமானப்படை முடிவெடுத்தது. ஆனால் யோபோவில் உள்ள ஜிலி கிராமத்தில் வாரச்சந்தை நடைபெற்ற போது ஜிகாதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து தாக்குகிறோம் என நினைத்து தவறுதலாக பொதுமக்கள் மீது அந்நாட்டு ராணுவம் தாக்குதல் நடத்தியது.

இதில் அப்பாவி பொதுமக்கள் 100 பேர் வரை உயிரிழந்ததுடன் பலரும் காயமடைந்த நிலையில் பலி எண்ணிக்கை உயிரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.