;
Athirady Tamil News

இரவில் நடுவீதியில் அடாவடி காட்டிய வெளிநாட்டு பெண்ணுக்கு பொலிஸார் காட்டிய அதிரடி

0

கல்கிசையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு முன்பாக கடந்த 12ஆம் திகதி இரவு இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட யுக்ரைன் நாட்டுப் பெண் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இலங்கை பெண் ஒருவரைத் தாக்கியதுடன், கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதாகவும், சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாகவும் குறித்த உக்ரைன் நாட்டுப் பெண் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் அனுமதி
சம்பவ தினத்தன்று இரவு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளால் இவர் உடனடியாகக் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர், கல்கிசை நீதவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டதையடுத்து, எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

விசாரணையில், இந்தப் பெண் கடந்த 12 வருடங்களாக இலங்கையில் வசித்து வருபவர் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் காயமடைந்த இலங்கை பெண் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து கல்கிசை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.