;
Athirady Tamil News

பெண் ஊழியர்களை மிரட்டி பாலியல் வன்கொடுமை: நாசிக் டிசிஎஸ் அலுவலகத்தில் கட்டாய மதமாற்ற விவகார பின்னணி

0

நாசிக்: நாசிக் டிசிஎஸ் அலு​வலக லவ் ஜிகாத் விவ​காரம் ஒட்​டுமொத்த நாட்​டை​யும் உலுக்கி உள்​ளது. அந்த அலுவலகத்​தில் ஏராள​மான பெண் ஊழியர்​கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உள்​ளனர். பலர் கட்​டாய மதமாற்​றம் செய்​யப்​பட்டு உள்​ளனர்.

மகா​ராஷ்டி​ரா​வின் நாசிக் நகரில் டாடா கன்​சல்​டன்சி சர்​வீசஸ் (டிசிஎஸ்) நிறு​வனத்​தின் பிபிஓ அலு​வல​கம் செயல்​படு​கிறது. அங்கு 150 ஊழியர்​கள் பணி​யாற்றி வரு​கின்​றனர். இதில் பெரும்​பாலானோர் பெண்​கள் ஆவர். இந்த சூழலில் நாசிக் டிசிஎஸ் அலு​வல​கத்​தில் பணி​யாற்​றும் 9 பெண் ஊழியர்​கள் கடந்த பிப்​ர​வரி மாதம் நாசிக் காவல் ஆணை​யர் அலு​வல​கத்​தில் ரகசி​ய​மாக புகார் மனுக்​களை அளித்​தனர்.

அதில், டிசிஎஸ் அலு​வல​கத்​தின் குறிப்​பிட்ட சில அதி​காரி​கள் கும்​பலாக செயல்​பட்டு பெண் ஊழியர்​களை பாலியல் வன்​கொடுமை செய்​வ​தாக​வும், லவ் ஜிகாத் பெயரில் கட்​டாய மதமாற்​றம் செய்​தாக​வும் குற்​றம் சாட்​டினர்.

7 பேர் கைது

இந்த புகார்​களை விசா​ரிக்க நாசிக் காவல் ஆணை​யரகம் சார்​பில் 7 பெண் போலீஸ் அதி​காரி​கள் அடங்​கிய தனிப்​படை அமைக்​கப்​பட்​டது. அவர்​கள் நாசிக் டிசிஎஸ் அலு​வல​கத்​தில் துப்​புரவு ஊழியர்​களாக பணி​யில் சேர்ந்​து, குற்​றம் சாட்​டப்​பட்ட மூத்த அதி​காரி​களின் நடவடிக்​கைகளை 40 நாட்​கள் வரை ரகசி​ய​மாகக் கண்​காணித்​தனர். அப்​போது டிசிஎஸ் பெண் ஊழியர்​கள் அளித்த புகார் மனுக்​கள் உண்மை என்​பது தெரிய​வந்​தது. இதைத் தொடர்ந்து 9 பெண் ஊழியர்​கள் அளித்த புகார் மனுக்​களின்​பேரில் 9 வழக்​கு​கள் பதிவு செய்​யப்​பட்​டன.

இதன்​பேரில் நாசிக் டிசிஎஸ் அலு​வலக மூத்த அதி​காரி​கள் தவுசிப் அத்​தர், டேனிஷ் ஷேக், ரசா மேமன், ஷாரூக் குரேசி, ஆசிப் அன்​சா​ரி, ஷபி ஷேக், பெண் ஊழியர் அஸ்​வினி சனானி ஆகிய 7 பேர் கைது செய்​யப்​பட்​டனர். மனித வள மேம்​பாட்டு அதி​காரி நீடா கான் என்​பவர் தலைமறை​வாகி விட்​டார். அவரை போலீ​ஸார் தீவிர​மாக தேடி வரு​கின்​றனர். இந்த விவ​காரம் தொடர்​பாக நாசிக் காவல் ஆணை​யரகம் சார்​பில் 12 உயர​தி​காரி​கள் அடங்​கிய சிறப்பு புல​னாய்வு குழு அமைக்​கப்​பட்டு உள்​ளது. இந்த குழு டிசிஎஸ் அலு​வலக ஊழியர்​கள் அனை​வரிட​மும் தனித்​தனி​யாக விசா​ரணை நடத்தி வரு​கிறது.

மகா​ராஷ்டிர முதல்​வர் எச்​சரிக்கை

மேற்​கு​வங்க தேர்​தலை​யொட்டி மகா​ராஷ்டிர முதல்​வர் தேவேந்​திர பட்​னா​விஸ் கொல்​கத்​தா​வில் நேற்று பாஜக​வுக்கு ஆதர​வாக வாக்கு சேகரித்​தார். முன்​ன​தாக அவர் நிருபர்​களிடம் கூறும்​போது, “நாசிக் கார்​பரேட் லவ் ஜிகாத் விவ​காரம் தொடர்​பாக தீவிர விசா​ரணை நடத்​தப்​படு​கிறது. இதில் தொடர்​புடைய​வர்​கள் யாரும் தப்ப முடி​யாது.

இந்த சதி​யின் பின்​னணி​யில் இருக்​கும் அனை​வரை​யும் கண்​டு​பிடித்து கடுமை​யான தண்​டனையை பெற்​றுத் தரு​வோம். இதுதொடர்​பாக மத்​திய புல​னாய்வு அமைப்​பு​களின் உதவியை கோரி உள்​ளோம்’’ என்று தெரி​வித்​தார். நாசிக் டிசிஎஸ் அலு​வல​கம் மூடப்​பட்டு 150 ஊழியர்​களும் வீட்​டில் இருந்து பணி​யாற்ற உத்​தர​விடப்​பட்டு உள்​ளது.

டாடா சன்ஸ் தலை​வர் சந்​திரசேகரன் கூறும்​போது, “போலீ​ஸாரின் விசா​ரணைக்கு டிசிஎஸ் நிர்​வாகம் முழு ஒத்​துழைப்பு அளித்து வரு​கிறது. தவறிழைத்த ஊழியர்​கள் சஸ்பெண்ட் செய்​யப்​பட்டு உள்​ளனர். இந்த விவ​காரம் தொடர்​பாக எங்​கள் நிறு​வனம் சார்​பில் தீவிர விசா​ரணை நடத்​தப்​பட்டு வரு​கிறது’’ என்று தெரி​வித்​தார்.

குல்​ஷ​னாக மாறிய கோபால்

நாசிக் டிசிஎஸ் அலு​வல​கத்​தில் கோபால் என்​பவர் பணி​யாற்றி வந்​தார். தவுசிப் அத்​தர் தலை​மையி​லான கும்​பல் அவரை மூளைச் சலவை செய்து மதம் மாறச் செய்​துள்​ளனர். இதன்​பிறகு அவரது பெயர் குல்​ஷன் என்று மாற்​றப்​பட்டு உள்​ளது. இதே​போல கிருஷ்ணா என்ற ஊழியரும் மூளைச் சலவை செய்​யப்​பட்டு மதமாற்​றம் செய்​யப்​பட்டு உள்​ளார்.

கடந்த 4 ஆண்​டு​களில் நாசிக் டிசிஎஸ் அலு​வல​கத்​தில் ஏராள​மான ஆண், பெண் ஊழியர்​கள் மத மாற்​றம் செய்​யப்​பட்டு உள்​ளனர். அலு​வலக நேரத்​தில் தொழுகை நடை​பெற்​றிருக்​கிறது. மேலும் நாசிக் அலு​வல​கத்​தில் முஸ்​லிம்​கள் அதிக அளவில் சேர்க்​கப்​பட்டு உள்​ளனர்.

78 புகார் மனுக்​கள்

இதுதொடர்​பாக நாசிக் போலீ​ஸார் கூறிய​தாவது:

நாசிக் நகரின் டிசிஎஸ் அலு​வல​கத்​தில் 18 வயது முதல் 25 வயது வரையி​லான இளம்​பெண்​கள் குறிவைக்​கப்​பட்டு உள்​ளனர். ஏராள​மான பெண்​கள் பாலியல் வன்​கொடுமைக்கு ஆளாகி உள்​ளனர். திருமண ஆசை காட்டி பல பெண்​கள் மதமாற்​றம் செய்​யப்​பட்டு உள்​ளனர்.

பாதிக்​கப்​பட்ட பெண்​கள், நிறு​வனத்​தின் மனித வள அதி​காரி​களாக பணி​யாற்​றிய நீடா கான், அஸ்​வினி சனானி ஆகியோரிடம் இ-மெ​யில் வாயி​லாக புகார் அளித்​துள்​ளனர். மொத்​தம் 78 புகார் மனுக்​கள் இ-மெயி​லில் அனுப்​பப்​பட்டு உள்​ளன. ஆனால் நீடா கானும், அஸ்​வினி சனானி​யும் எவ்​வித நடவடிக்​கை​யும் எடுக்​க​வில்​லை. அலு​வல​கத்​தில் இதெல்​லாம் சாதா​ரணம் என்று கூறி பாலியல் வன்​கொடுமை விவ​காரங்​களை முழு​மை​யாக மூடி மறைத்துள்​ளனர்.

ஒன்​பது பெண்​கள் மட்​டும் துணிச்சலாக நாசிக் காவல் ஆணை​யரகத்தை அணுகினர். அவர்​களின் பாது​காப்பு கருதி பெண் போலீஸ் அதி​காரி​கள், டிசிஎஸ் அலு​வல​கத்​தில் துப்​புரவு ஊழியர்​களாக சேர்ந்து புலன் விசா​ரணை நடத்தி ஒட்​டு மொத்த கும்​பலை​யும் பிடித்​துள்​ளனர். வழக்குக்கு முக்​கிய ஆதா​ர​மாக டிசிஎஸ் அலு​வலக சிசிடிவி கேமரா பதிவு​கள் உள்​ளன.

இந்த வழக்​கின் முழு​மை​யான விவரங்​கள் தேசிய புல​னாய்வு அமைப்பு (என்​ஐஏ), தீவிர​வாத தடுப்பு போலீ​ஸாரிடம் அளிக்​கப்​பட்டு உள்​ளது. மதமாற்ற கும்​பலின் ஆணிவேரை கண்​டறிய என்ஐஏ உதவியை கோரி​யுள்​ளோம். நாசிக் வழக்கை என்​ஐஏ-க்கு மாற்​றக் கோரி உச்ச நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்டு உள்​ளது. உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட்​டால் வழக்கு என்​ஐஏ-க்கு மாற்​றப்​படும்.

தலைமறை​வாக உள்ள மனித வள மேம்​பாட்டு அதி​காரி நீடா கான், முன்​ஜாமீன் கோரி நாசிக் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​துள்​ளார். கர்ப்​ப​மாக இருப்​ப​தால் கருணை அடிப்​படை​யில்​ முன்​ஜாமீன்​ வழங்​க அவர்​ கோரி​யுள்​ளார்​. இதற்​கு போலீஸ்​ தரப்​பில்​ கடும்​ எதிர்ப்​பு தெரிவிக்​கப்​பட்​டு உள்​ளது. இவ்​வாறு ​நாசிக்​ போலீஸார்​ தெரிவித்​துள்​ளனர்​.

பெண் ஊழியர் வாக்​குமூலம்

பாதிக்​கப்​பட்ட பெண் ஊழியர் ஒரு​வர் போலீ​ஸில் அளித்த வாக்​குமூலத்​தில் கூறி​யிருப்​ப​தாவது: கடந்த சில ஆண்​டு​களாக நாசிக் டிசிஎஸ் அலு​வல​கத்​தில் பணி​யாற்றி வரு​கிறேன். மூத்த அதி​காரி டேனிஷ் ஷேக் என்​னுடன் நட்​பாக பழகி​னார். கடந்த 2024-ம் ஆண்டு ஆகஸ்​டில் அவர் என்னை பாலியல் வன்​கொடுமை செய்​தார். எனது விருப்​பத்​துக்கு மாறாக தொடர்ச்​சி​யாக பாலியல் வன்​கொடுமை​யில் ஈடு​பட்டு வந்​தார்.

திரு​மணம் செய்து கொள்​வ​தாக கூறி முஸ்​லிம் மதத்​துக்கு மாற வலி​யுறுத்​தி​னார். ஆனால் அவருக்கு ஏற்​கெனவே திரு​மண​மாகி குழந்​தைகள் இருப்​பது தெரிய​வந்​தது. அவரிடம் இருந்து விலக முயற்சி செய்​தேன். ஆனால் டேனிஷ் ஷேக் தொடர்ந்து பாலியல்​ரீ​தி​யாக துன்​புறுத்தி வந்​தார். மதம் மாறும்​படி​யும் கட்​டாயப்​படுத்​தி​னார்.

இதற்​கிடை​யில் டேனிஷ் ஷேக்​கின் நண்​பர் தவுசிப் அத்​தரும் என்​னிடம் அத்​து​மீறி நடந்து கொண்​டார். அவரது விருப்​பத்​துக்கு இணங்​க​வில்லை என்​றால் டேனிஷ் ஷேக்​கும் நானும் இருக்​கும் புகைப்​படங்​கள், வீடியோக்​களை சமூக வலை​தளங்​களில் வெளி​யிடு​வேன் என்று மிரட்​டல் விடுத்​தார். இதுதொடர்​பாக டிசிஎஸ் மூத்த அதி​காரி​களிடம் புகார் அளித்​தேன். அவர்​கள் எவ்​வித நடவடிக்​கை​யும் எடுக்​க​வில்​லை. வேறு​வழி​யின்றி காவல் துறை​யில் புகார் அளித்​தேன். தற்​போது ஒட்​டுமொத்த கும்​பலும் போலீ​ஸில் சிக்கி உள்​ளது. இவ்​வாறு பாதிக்​கப்​பட்ட பெண் ஊழியர் தெரி​வித்​துள்​ளார்.

பெண்களை ஓட்டலுக்கு அழைத்த அதிகாரிகள்

நாசிக் டிசிஎஸ் அலுவலகத்தில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை மற்றும் மத மாற்றங்களுக்கு அந்த அலுவலகத்தில் மூத்த அதிகாரியாக பணியாற்றி தவுசிப் அத்தர் மூளையாக செயல்பட்டு உள்ளார். மனித வள மேம்பாட்டு அதிகாரி நீடா கான் அவருக்கு உடந்தையாக இருந்துள்ளார். அலுவலக பணி நேரத்தில் தவுசிப் அத்தர், இந்து கடவுள்களை அவமதிக்கும் வகையில் பேசி உள்ளார்.

இந்து பெண்கள் குங்குமம் பூசுவதை எதிர்மறையாக விமர்சித்து உள்ளார். மேலும் தவுசிப் அத்தர், டேனிஷ் ஷேக், ரசா மேமன் உள்ளிட்டோர் இளம்பெண்களிடம் தொடர்ச்சியாக பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபட்டு உள்ளனர். சில பெண் ஊழியர்களுக்கு இரவு பணி வழங்கி, அவர்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

விருந்து என்ற பெயரில் பெண் ஊழியர்களை ஓட்டலுக்கு வலுக்கட்டாயமாக அழைத்துள்ளனர். விருந்தில்பங்கேற்கவில்லை என்றால் பணிநீக்கம் செய்வோம் என்றும் மிரட்டல் விடுத்துள்ளனர். நிர்பந்தம் காரணமாக ஓட்டலுக்கு சென்ற இந்து பெண்களை, வலுக்கட்டாயமாக மாட்டிறைச்சியை சாப்பிட செய்துள்ளனர். பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர் என்று நாசிக் போலீஸார் தெரிவித்து உள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.