;
Athirady Tamil News

146 ஆண்டுகளுக்குப் பின்… மாஸ்கோவை உலுக்கிய பனிப்புயல்

0

மாஸ்கோ,

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் கடந்த சில தினங்களாக வீசி வரும் கடும் பனிப்புயல் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது.

கடந்த 1880-ம் ஆண்டிற்குப் பிறகு சுமார் 146 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இப்போதுதான் இவ்வளவு சக்திவாய்ந்த பனிப்புயலை நகரம் எதிர்கொண்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்தப் பனிப்புயலானது வினாடிக்கு 23 மீட்டர் (சுமார் 82 கி.மீ/மணி) என்ற அதிவேகத்தில் வீசியது. இதனால் நகரின் பல பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின் கம்பங்கள் சரிந்து விழுந்ததால் பல இடங்களில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.

சாலைகளில் சுமார் 12 சென்டிமீட்டர் உயரத்திற்குப் பனி குவிந்துள்ளதால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது அதனை அகற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.