;
Athirady Tamil News

வெளிநாடு அனுப்புவதாக 2 கோடி ரூபாய் மோசடி : தம்பதி கைது

0

வெளிநாட்டு வேலை பெற்றுத் தருவதாகக் கூறி சுமார் 2 கோடி ரூபாய் பண மோசடி செய்த இருவரை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியக அதிகாரிகள் திங்கட்கிழமை (4) கைது செய்துள்ளனர்.

சம்பவத்தில் ஹங்குரன்கெத்த, ரிக்கிலகஸ்கட பிரதேசத்தைச் சேர்ந்த தம்பதியினரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெரமுனவின் முன்னாள் பிரதேச அரசியல்வாதி
ருமேனியா நாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி நாட்டின் பல பாகங்களையும் சேர்ந்த ஆண், பெண் இருபாலாரிடமிருந்தும் 213 இலட்ச ரூபாய் பணத்தைப் பெற்று மோசடி செய்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்துக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேக நபர் பொதுஜன பெரமுனவின் முன்னாள் பிரதேச அரசியல்வாதி ஒருவர் எனத் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் சில காலத்துக்கு முன்னர் ருமேனியாவில் தொழில் செய்தவர் எனவும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.