;
Athirady Tamil News

லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 5 பேர் பலி! போர்நிறுத்தம் முறிவு?

0

லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களில் 5 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லெபனானின் தெற்கு மாகாணத்தில் உள்ள தௌரா கிராமத்தின் மீது இஸ்ரேலிய படைகள் நேற்று (மே 8) வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில், 4 பேர் கொல்லப்பட்ட நிலையில், 8 பேர் படுகாயமடைந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, கஃபார் சவுபா எனும் கிராமத்தின் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் அங்கு பணியாற்றி வந்த மருத்துவப் பணியாளர் ஒருவர் கொல்லப்பட்டதாக, லெபனானின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், டைரே மாகாணத்தில் உள்ள தௌரா உள்ளிட்ட 6 கிராமங்களில் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேலிய ராணுவம் அறிவித்த சில மணிநேரங்களில் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

முன்னதாக, வடக்கு இஸ்ரேல் நோக்கி இன்று பிற்பகல் ஹிஸ்புல்லா படையினர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆனால், இந்தத் தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இதுவரை எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.

இத்துடன், அஹமது பலோத் என்பவர் ஹிஸ்புல்லா படையின் தளபதியாகச் செயல்பட்டு வந்ததாகவும், அவரைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் பலோத் கொல்லப்பட்டதாகவும் வியாழக்கிழமை அன்று இஸ்ரேல் ராணுவம் அறிவித்தது.

கடந்த ஏப். 17 அன்று முதல் இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையே போர்நிறுத்தம் கொண்டுவரப்பட்ட நிலையில் இருதரப்பும் மீண்டும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.