;
Athirady Tamil News

9 ஆண்டுகளின் பின் சீனா செல்லும் அமெரிக்க ஜனாதிபதி; டிரம்ப் பயணம் உறுதி

0

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எதிர்வரும் 13-15 ஆகிய மூன்று நாள்கள் அரசு முறைப் பயணம் சீனா செல்லவுள்ளார். கிட்டத்தட்ட 9 ஆண்டுகளில் அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் சீனாவிற்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் அழைப்பின் பேரில், அவர் சீனாவுக்கு வருகை தர உள்ளதாக சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இன்று (11) அறிவித்தார்.

நீடித்த அமெரிக்க-இஸ்ரேல்-ஈரான் போர், ஹோா்முஸ் நீரிணை முற்றுகையினால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிசக்தி நெருக்கடி மற்றும் தாய்வான் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் இரு நாடுகளுக்கும் இடையே அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில் இந்தப் பயணம் அமைகின்றது.

அமெரிக்க ஜனாதிபதி வரும் வியாழக்கிழமை ஜனாதிபதி ஷி ஜின்பிங்குடன் வரவேற்பு நிகழ்ச்சி மற்றும் இருத்தரப்பு சந்திப்பில் கலந்து கொள்வார் என்று அமெரிக்காவின் முதன்மை துணைப் பத்திரிகைச் செயலர் அன்னா கெல்லி நேற்று (10) தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் அமெரிக்க ஜனாதிபதியின் சீனப் பயணம் உறுதி செய்யப்பட்டுள்ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.