;
Athirady Tamil News

வெனிசுலாவை 51-வது மாநிலமாகச் சித்தரித்த டொனால்ட் ட்ரம்ப்

0

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) தளத்தில், வெனிசுலா நாட்டை அமெரிக்காவின் 51-வது மாநிலமாகக் குறிப்பிடும் வரைபடம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

அந்தப் படத்தில் வெனிசுலாவின் எல்லைக்குள் அமெரிக்கக் கொடி பொறிக்கப்பட்டு “51-வது மாநிலம்” (51st State) என லேபிளிடப்பட்டுள்ளது.

சீனாவிற்கு முக்கியமான உச்சிமாநாட்டிற்குச் சென்றுகொண்டிருந்த வேளையில் ட்ரம்ப் இந்தப் பதிவை வெளியிட்டுள்ளார்.

எண்ணெய் வளம் மிக்க தென் அமெரிக்க நாடான வெனிசுலாவைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகக் கூறிவந்த ட்ரம்ப், அதனைப் புதிய அமெரிக்க மாநிலமாக மாற்றுவது குறித்துப் பரிசீலிப்பதாகவும் ஊடகமொன்றிடம் அண்மையில் தெரிவித்திருந்தார்.

கடந்த ஜனவரி மாதம் முன்னாள் தலைவர் நிக்கோலஸ் மதுரோ அமெரிக்கப் படைகளால் பிடிபட்டதைத் தொடர்ந்து, நாட்டின் இடைக்கால அதிபராகப் பொறுப்பேற்றுள்ள டெல்சி ரோட்ரிக்ஸ் (Delcy Rodriguez) இது குறித்துக் கருத்து வெளியிட்டுள்ளார்.

வெனிசுலா ஒருபோதும் அமெரிக்காவின் 51-வது மாநிலமாக மாறுவது குறித்துச் சிந்தித்ததே இல்லை என திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

அமெரிக்காவுடனான உறவுகளைச் சீர்செய்யும் விதமாக, சுரங்கம் மற்றும் எண்ணெய் துறைகளில் வெளிநாட்டு நிறுவனங்கள் (குறிப்பாக அமெரிக்க நிறுவனங்கள்) முதலீடு செய்வதற்கு அவர் அனுமதி அளித்துள்ளார்.

வெனிசுலாவின் எதிர்க்கட்சியினர் நாட்டில் தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தி வருகின்றனர்.

எனினும், புதிய தேர்தல் எப்போது நடைபெறும் என்று மே 1-ம் திகதி கேட்கப்பட்ட கேள்விக்கு, அது “என்றாவது ஒரு நாள்” நடக்கும் என்றும், தமக்கு அது குறித்துத் தெரியவில்லை என்றும் ரோட்ரிக்ஸ் பதிலளித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.