;
Athirady Tamil News

கல்முனை கடற்கரைப்பள்ளி நாகூர் ஆண்டகை தர்காவில் 205ஆவது வருடாந்த கொடியேற்றத் திருவிழா (video)

0

video link-https://fromsmash.com/Q5HNKyiG9m-dt

கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க கல்முனை கடற்கரைப்பள்ளி நாகூர் ஆண்டகை தர்கா ஷரீஃபில், அஸ்-ஸையித் அப்துல் காதிர் ஷாஹுல் ஹமீது வலியுல்லாஹ் அவர்களின் நினைவாக நடாத்தப்படும் 2026 ஆம் ஆண்டிற்கான 205ஆவது வருடாந்த கொடியேற்றத் திருவிழா வரும் நவம்பர் மாதம் 10 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வெகுவிமர்சையாக ஆரம்பமாகவுள்ளது.

இப் புனிதமிக்க கொடியேற்ற பெருவிழாவானது 2026 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி, தொடர்ந்து 12 நாட்கள் பல்வேறு ஆன்மீக நிகழ்வுகளுடன் நடைபெற்று 2026 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 22 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொடியிறக்கத்துடன் இனிதே நிறைவடையும்.

நாட்டின் நாலாபாகங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான யாத்திரிகர்களும் பக்தர்களும் வருகை தரும் இக் கொடியேற்றத் திருவிழாவானது, யாத்திரை ஆணைச்சட்டத்தின்   ஏற்பாடுகளுக்கு அமைய, 1963 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதிய 13529 ஆம் இலக்க இலங்கை அரசாங்க வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைவாகவும் உத்தியோகபூர்வமாக ஒழுங்கமைக்கப்பட்டு நடாத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவ் வருடாந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கொடியேற்ற விழாவை முன்னிட்டு வருகை தரும் பக்தர்களுக்கான பாதுகாப்பு, சுகாதாரம், போக்குவரத்து மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைப் பிராந்திய அரச நிறுவனங்கள், கல்முனை மாநகர சபை மற்றும் பொலிஸ் திணைக்களத்துடன் இணைந்து தர்கா நிருவாக சபையினர் விரிவாக ஏற்பாடு செய்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.