;
Athirady Tamil News

சாய்ந்தமருதில் “லீடர் அஷ்ரஃப் கிண்ணம்” கிரிக்கெட் சுற்றுப் போட்டி குறித்த விசேட ஆயத்தக் கலந்துரையாடல்!

0

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, அம்பாறை மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “லீடர் அஷ்ரஃப் கிண்ணம்” மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் சாய்ந்தமருது பிராந்திய ஏற்பாடுகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் திங்கட்கிழமை (19) இரவு சாய்ந்தமருது இளைஞர் காங்கிரஸ் காரியாலயத்தில் இடம்பெற்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சாய்ந்தமருது பிரதேச இளைஞர் அமைப்பாளரும், உயர் பீட உறுப்பினருமான எம். பாமி மன்சூர் அவர்களின் தலைமையில் இக் கலந்தரையாடல் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் கட்சியின் தேசிய இளைஞர் அமைப்பாளரும், முன்னாள் இராஜாங்க அமைச்சரும், பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளருமான எஸ்.எம்.எம். முஷாரப், கட்சியின் அம்பாறை மாவட்ட செயலாளரும், முன்னாள் மாநகர சபை உறுப்பினருமான ஏ.சி. சமால்தீன், கட்சியின் உயர் பீட உறுப்பினர் கலாநிதி முபீசால் அபூபக்கர், அம்பாறை மாவட்ட இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் ஹக்கானி மஜீத் மற்றும் கிராம மட்ட இளைஞர் அமைப்பாளர்கள், இளைஞர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இக்கலந்துரையாடலின் போது, சாய்ந்தமருது பிரதேசத்தில் குறித்த கிரிக்கெட் சுற்றுப் போட்டியை எதிர்வரும் நவம்பர் மாதம் 10ஆம் திகதியன்று நடாத்தி முடிப்பது தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது. அத்துடன், இப்போட்டியை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வதற்காகச் சாய்ந்தமருது பிரதேச இளைஞர்கள் மற்றும் துறை சார்ந்த நபர்களை உள்ளடக்கிய விசேட குழு ஒன்றும் இதன்போது அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.