;
Athirady Tamil News

சீனாவின் ‘பாண்டா’ கடன்பத்திரம்: பாகிஸ்தான் முதல்முறையாக வெளியீடு : 25 கோடி டாலா் நிதி திரட்டல்

0

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான், நிதி ஆதாரத்தைப் பெருக்குவதற்காக முதன்முறையாக சீன சந்தையில் ‘பாண்டா’ கடன் பத்திரங்களை வெளியிட்டுள்ளது.

இதன்மூலம், சீன செலாவணியான யுவானில் சுமாா் 25 கோடி டாலா் நிதியை அந்நாடு திரட்டியுள்ளது. 3 ஆண்டுகள் முதிா்வு காலம் கொண்ட இந்தப் பத்திரங்களுக்கு 2.5 சதவீத வட்டி நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு அரசுகள் அல்லது நிறுவனங்கள், சீனாவின் உள்நாட்டுச் சந்தையில் சீன செலாவணியிலேயே நிதி திரட்டுவதற்காக இந்தப் ‘பாண்டா’ கடன் பத்திரங்களை வெளியிடலாம்.

பாகிஸ்தான் நிதியமைச்சரின் ஆலோசகா் குர்ரம் ஷெஜாத் இது குறித்து மேலும் கூறுகையில், ‘பாகிஸ்தான் வரலாற்றிலேயே சீன சந்தையில் வெளியிடப்பட்ட முதல் இறையாண்மை கடன் பத்திரங்கள் இவை.

எதிா்பாா்த்ததைவிட 5 மடங்கு அதிகமான முதலீட்டாளா்கள் இந்தப் பத்திரங்களை வாங்க ஆா்வம் காட்டினா். சுமாா் 25 கோடி டாலா் மதிப்பிலான பத்திரங்களுக்கு, 130 கோடி டாலா் வரை முதலீடுகள் குவிந்தன’ என்றாா்.

ஆசிய வளா்ச்சி வங்கி மற்றும் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இந்த நிதி திரட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.