;
Athirady Tamil News

ஹொண்டா வைரஸ்; பிரான்சில் முகக்கவச விற்பனை திடீர் உயர்வு

0

பிரான்சில் ஹொண்டா வைரஸ் தொற்று காரணமாக FFP2 முகக்கவச விற்பனை திடீர் உயர்வு அடைதுள்ளதாக பிரான்ஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசு நிலைமை கவலைக்குரியது அல்ல என்று கூறினாலும்,பிரெஞ்சு மக்கள் முன்னெச்சரிக்கையாக FFP2 முகக்கவசங்களை அதிகமாக வாங்கத் தொடங்கியுள்ளனர்.

தகவலின்படி, 3 நாட்களில் 15,000 பெட்டிகள் விற்றுள்ளன அதேசமயம் வழக்கமான வார விற்பனை 2,400 பெட்டிகள் விற்பனையாவதாக கூறப்படுகின்றது.

FFP2 முகக்கவச விலை 5 யூரோ இல் இருந்து 7 யூரோ ஆக உயர்ந்துள்ளது ஹொண்டா வைரஸ் தொடர்பு கொண்ட 26 நபர்களும் எதிர்மறை எனத் தேர்வாகியுள்ளனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு,வாரத்தில் 3 முறை பரிசோதிக்கப்படுவார்கள்.

இந்த 26 பேரில் , 8 பேர் Sainte‑Hélène Johannesburg விமானத்திலும், 14 பேர் Johannesburg → Amsterdam விமானத்திலும் ஹொண்டா வைரஸ் கொண்டிருந்த நெதர்லாந்து பயணியுடன் தொடர்பில் இருந்தவர்கள்.

Hondius கப்பலில் இருந்த 5 பேர் பாரிஸ் Bichat மருத்துவமனையில் உள்ள நிலையில் அவர்களில் 4 பேர் நலமாக உள்ள அதேசமயம் ஒரு பெண் கடுமையான நிலையில் மீளுருவாக்கப் பிரிவில் உள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவிகின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.