அரசாங்க விசேட விடுமுறை அறிவிப்பு
அரச வெசாக் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 31 ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) அரசாங்க விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுநிர்வாகம், மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்றங்கள் அமைச்சர் சந்தன அபேரத்ன வர்த்தமானி அறிவித்தலையும் பிரசுரித்துள்ளார்.
வெசாக் வாரம் பிரகடனம்
2026.03.30 ஆம் திகதியன்று எடுக்கப்பட்ட அமைச்சரவை தீர்மானத்துக்கமைய, 2026.05.27 ஆம் திகதி முதல் 2026.06.02 ஆம் திகதி வரையிலான காலப்பகுதி வெசாக் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய, இன்று மே 27ஆம் திகதி முதல் ஜூன் 02ஆம் திகதி வரையிலான காலப்பகுதியை வெசாக் வாரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 2026ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் உற்சவத்தின் உத்தியோகபூர்வ நிகழ்வு மே மாதம் 30ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய, அடுத்த நாளான மே மாதம் 31ஆம் திகதியை அரசாங்க விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தி பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலையும் அண்மையில் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சுற்றறிக்கையை பின்பற்றுமாறும் அறிவுறுத்தல்
2570 ஸ்ரீ புத்த வருடத்தை முன்னிட்டு, 2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் விழாவை மாத்தறை, திஹகொட மிதெல்லவல புராதன விகாரையை மையப்படுத்தி நடத்துவதற்குத் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
அதன்படி, இந்த ஆண்டுக்கான அரச வெசாக் விழா, ஜனாதிபதி அநுர குமார திசநாயக்கவின் தலைமையில், மாத்தறை, திஹகொடவில் உள்ள மிதெல்லவல விகாரையில் இன்று நடைபெற உள்ளது.
இதற்கிடையில், நாடு முழுவதும் வெசாக் விழாக்களை ஏற்பாடு செய்வதில் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டுதல்களைக் கொண்ட சுற்றறிக்கையைப் பின்பற்றுமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.