;
Athirady Tamil News

சங்கிலியன் சிரார்த்தன தினம்

0
இரண்டாம் சங்கிலிய மன்னனின் 407வது சிரார்த்த தினத்தை முன்னிட்டு யாழில் அமைந்துள்ள சங்கிலிய மன்னன் அரண்மனையில் பல்வேறு நிகழ்வுகள் இடம் பெற உள்ளதாக சங்கிலிய மன்னன் அறக்கட்டளையின் செயலாளர் சிவத்தொண்டர் சிறீந்திரன் தெரிவித்தார்.
யாழில் இன்றைய தினம் வியாழக்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்

சைவத்தையும் தமிழையும் வளர்ப்பதற்கு அரும்பாடுபட்ட இரண்டாம் சங்கிலிய மன்னனின் சிராத்த தினத்தை ஏழு வருடங்களாக செய்து வருகிறோம்.

அந்த வகையில் எதிர்வரும் சனிக்கிழமை காலை 9 மணிக்கு யாழ் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள சங்கிலிய மன்னனின் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கும் நிகழ்வு இடம்பெறும்.

அதனைத் தொடர்ந்து ஜமுனா ஏரி பகுதிக்கு ஊர்வலமாகச் சென்று பூஜை வழிபாடுகள் இடம் பெற்று பின்னர் சங்கிலிய மன்னனின் அரண்மனையில் நிகழ்வுகள் ஆரம்பமாகும்.

இம்முறை விசேடமாக சங்கிலிய மன்னனின் வாழ்க்கை வரலாற்றை கண்காட்சியாக நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள நிலையில் குறித்த நிகழ்வுக்கு சைவ அடியவர்கள் அனைவரும் பங்கு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் என  மேலும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.