;
Athirady Tamil News

நீராடச் சென்ற இரு இளம் பெண்கள் உட்பட மூவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

0

அநுராதபுரம் நொச்சியாகம, தழுவ முகத்துவாரப் பகுதியில் நீராடச் சென்ற மூன்று பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

இவ்விபத்தில் 18 மற்றும் 19 வயதுடைய இரண்டு இளம் பெண்களும், 24 வயதுடைய இளைஞர் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இன்று (06) மாலை 5:30 மணியளவில் இந்த அனர்த்தம் சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த மூவரும் புத்தளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நொச்சியாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.