;
Athirady Tamil News

இலங்கையில் இடம்பெற்ற கோர விபத்து ; பெண் ஒருவர் பலி, 12 பேர் காயம்

0

புத்தளம் ஆனமடுவ, முதலக்குலிய பகுதியில் நேற்று (06) மதியம் 1:00 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 12 பேர் காயமடைந்துள்ளனர்.

மேலதிக விசாரணை
பொலன்னறுவை பகுதியிலிருந்து சிலாபம், முன்னேஸ்வரம் கோவிலுக்கு சிறிய ரக லொறி ஒன்றில் வழிபாட்டிற்காக வந்த குழுவினர், மீண்டும் திரும்பிச் சென்று கொண்டிருந்த போது, லொறி கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மரமொன்றில் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

விபத்து நடந்த தருணத்தில் லொறியில் 13 பேர் பயணித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தினால் காயமடைந்த அனைவரும் ஆனமடுவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் பொலன்னறுவை, அரலகங்வில பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மேலும், காயமடைந்தவர்களில் இருவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால், அவர்கள் மேலதிக சிகிச்சைக்காக புத்தளம் தள வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

லொறி ஓட்டுநருக்கு ஏற்பட்ட தூக்கக் கலக்கமே இந்த விபத்துக்குக் காரணம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இச்சம்பவம் குறித்து ஆனமடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.