;
Athirady Tamil News

ஏவுகணைகளின் உற்பத்தியை 2.5 மடங்கு அதிகரிக்கும் வடகொரியா

0

பியோங்யாங்,

சர்வதேச தடைகளை தாண்டி, வடகொரியா தனது அணு ஆயுத உற்பத்தியை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, அணு ஆயுதத்திற்கான எரிபொருள் மற்றும் பிற பொருட்களை உற்பத்தி செய்வதற்கான புதிய ஆலையை அந்நாட்டு அரசு சமீபத்தில் திறந்தது.

இந்தநிலையில், வடகொரியாவில் ஏவுகணைகளின் உற்பத்தியை அடுத்த 5 ஆண்டுகளில், 2.5 மடங்கு அதிகரிக்க அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டுளார்.

ராணுவ தளவாட உற்பத்தி நிலவரங்களை கிம் ஜாங் உன் நேரில் ஆய்வு செய்த போது, அந்நாட்டின் சக்திவாய்ந்த HWASONG-11 ரக ஏவுகணை உற்பத்திப் பிரிவின் படங்கள் வெளிப்படையாக காண்பிக்கப்பட்டது சர்வதேச அளவில் உற்றுநோக்கப்படுகின்றன.

மத்திய கிழக்கில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே போர் நீடித்து வரும் சூழலில் வடகொரியாவின் இந்த நடவடிக்கை கவனம் பெற்றுள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் வடகொரியாவின் அணுசக்திப் பொருட்கள் உற்பத்தித் திறன் இருமடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.