;
Athirady Tamil News

கோட்டாபயவிற்கு ஆலோசனை வழங்கியதே சுரேஷ் சலே தான் ; சரத் பொன்சேகா வெளியிட்ட தகவல்

0

தன்னை கைது செய்து, சிறையில் அடைப்பதற்கான அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வழங்கியது சுரேஷ் சலே தான் என்று ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மதுபோத்தலுக்கும் சோற்றுப் பார்சலுக்கும் மற்றும் ஆயிரம் ரூபாய் பணத்திற்கும் சமூக ஊடகங்கள் வாயிலாக வதந்திகளைப் பரப்பி, ராஜபக்ஷக்களுக்கு முட்டுக்கொடுக்கும் நபர்கள் குறித்துக் குறிப்பிட்ட அவர், தனக்கு நேர்ந்த அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பிலும் குறிப்பிட்டுள்ளார்.

சலேவின் ஆலோசனைகள்
தான் எவ்வித குற்றச்சாட்டுகளோ அல்லது முறையான நீதிமன்ற விசாரணைகளோ இன்றி, கடற்படைத் தலைமையகத்தில் சுமார் 8 மாதங்கள் தொடர்ச்சியாக தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக பொன்சேக்கா சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜன்னல்கள் மற்றும் கதவுகள் பலகைகளால் அடைக்கப்பட்ட ஒரு சிறிய அறையிலேயே தான் அடைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் அவர் விவரித்தார்.

சலேவின் ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் பெற்றுக்கொண்டே கோட்டாபய ராஜபக்ஷ தங்களை சிறையில் அடைத்துப் பழிவாங்கினார் என்று குற்றம் சுமத்தியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.