யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகத்திலிருந்து, இன்றைய தினம் புதன்கிழமை கப்பல் ஊடாக தங்கம் கடத்துவதற்கு முயற்சித்ததாக கூறப்படும் சுமார் 26 பேரின் பயணம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
காங்கேசன்துறையிலிருந்து இந்தியாவின் நாகப்பட்டினத்துக்கு முன்னெடுக்கப்படும் சிவகங்கை பயணிகள் கப்பலில் பயணிக்கவிருந்த இலங்கை மற்றும் இந்திய பிரஜைகளே கைது செய்யப்பட்டுள்ளனர்
கைது செய்யப்பட்டவர்களில் 09 இலங்கையர்களும், 17 இந்திய பிரஜைகளும் உள்ளடங்குகின்றனர்.
கைது செய்யப்பட்டவர்கள் தங்கத்தை உடலுக்குள் மறைத்து வைத்துள்ளனரா என்பதை உறுதிப்படுத்துவதற்காக, யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு எக்ஸ்ரே பரிசோதனை எடுக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது