;
Athirady Tamil News

ஈரான் பேச்சுவார்த்தை குழுவினரை கொல்ல இஸ்ரேல் சதி- அமெரிக்கா தகவலால் பரபரப்பு

0

அமெரிக்காவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி வரும் ஈரான் குழுவில் இடம்பெற்றுள்ள அந்நாட்டு பாராளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப், வெளியுறவுத்துறை மந்திரி அப்பாஸ் அராக்சி ஆகியேரை கொல்ல இஸ்ரேல் திட்டமிட்டதாக அமெரிக்கா தெரிவித்து உள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் தொடங்கிய முக்கியமான போர்நிறுத்தப் பேச்சு வார்த்தைகளின்போது, ​​முகமது பாகர் கலிபாப் மற்றும் அப்பாஸ் அரக்ச்சி ஆகியோரைக் கொலை செய்ய இஸ்ரேல் திட்டமிட்டிருக்கலாம் என்று அமெரிக்க அதிகாரிகள் அஞ்சினார்கள் என்றும் இதுகுறித்து ஈரானை எச்சரிக்குமாறு மத்திய கிழக்கில் உள்ள தனது நட்பு நாடுகளை அமெரிக்கா கேட்டுக்கொண்டதாகவும் தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

பேச்சுவார்த்தைகளின் போது இரு தலைவர்கள் மீதும் மேற்கொள்ளப்படும் எந்தவொரு கொலை முயற்சியும் பேச்சுவார்த்தைகளைத் தடம் புரளச் செய்து, மீண்டும் சண்டையைத் தூண்டிவிடும் என்று அமெரிக்க அதிகாரி கள் கவலையடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.