;
Athirady Tamil News

மில்லியன் கணக்கான மக்களை கவர்ந்த இலங்கை சிறுமிக்கு முள்ளம்பன்றி கிடைத்த கதை!

0

கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்கள் வாயிலாக சர்வதேச அளவிலும் கூட பெரும் கவனத்தை ஈர்த்து, மில்லியன் கணக்கான மக்களின் இதயங்களை நெகிழ வைத்தது, இலங்கை சிறுமிக்கும் அவளது செல்லப் பிராணியான முள்ளம்பன்றிக்கும் இடையிலான பாசப் பிணைப்பாகும்.

வரலாற்றுச் சிறப்புமிக்க பொலன்னறுவையின் ’14 எள’ (14 ஆம் கால்வாய்) கிராமத்தில் வசித்து வரும் அச்சிறுமியின் பெயர் ஸ்ரேதா புன்சதி ஆகும். தற்போது தரம் 2 இல் கல்வி பயிலும் ஸ்ரேதாவிற்கு எப்படி அந்த முள்ளம் பன்றி கிடைத்தது என்பது தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்ரேதாவிற்கு எப்படி முள்ளம் பன்றி கிடைத்தது?
ஒரு நாள், இந்தக் குட்டி முள்ளம்பன்றி நாய்களின் கொடூரத் தாக்குதலுக்கு உள்ளாகி, காயமடைந்த நிலையில் ஸ்ரேதாவின் வீட்டிற்கு அருகில் வந்ததாக சிறுமியின் தாயார் கூறியுள்ளார்.

தாக்குதலுக்கு உள்ளான அந்த முள்ளம் பன்றியை , ஸ்ரேதாவும் அவளது குடும்பத்தினரும், அந்த அப்பாவி முள்ளம்பன்றியைப் பராமரித்து குணப்படுத்தியுள்ளனர்.

அன்றிலிருந்து இந்த குட்டி முள்ளம்பன்றி ஸ்ரேதாவின் குடும்பத்தில் மற்றுமொரு அன்பான உறுப்பினராக மாறியதாக தாயார் சனெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.