;
Athirady Tamil News

நெடுந்தீவு மக்களின் நீண்டகால குறை தீர்ந்தது: புதிய எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அடிக்கல் நாட்டு விழா!

0
நெடுந்தீவுக்கான புதிய எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் விமல் ரட்நாயக்க , கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்  மற்றும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் ஆகியோர் கலந்து கொண்டு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கான அடிக்கல்லை நாட்டினர்.
கடல் கடந்த தீவான நெடுந்தீவில் எரிபொருள் நிரப்பு நிலையம் இல்லாத நிலையில் , அப்பகுதியை சேர்ந்த மக்கள் கடல் தாண்டி வேலணை பகுதிக்கு வந்தே கொள்கலன்களில் எரிபொருட்களை நிரப்பி செல்ல வேண்டிய நிலைமை காணப்பட்டது. இதனால் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வந்ததுடன் , சில வியாபாரிகள் , எரிபொருட்களை வேலணையில் கொள்வனவு செய்து , நெடுந்தீவுக்கு எடுத்து சென்று அதிக விலைக்கும் விற்று வந்தனர்.
அதேவேளை , எரிபொருள் தட்டுப்பாடு நிலவிய கால பகுதியில் கொள்கலன்களில் எரிபொருள் விநியோகிக்க தடை செய்யப்பட்டமையால் , பல சிரமங்களை நெடுந்தீவு மக்கள் எதிர்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் நெடுந்தீவுக்கு என புதிய எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு வைபவம் இன்றைய தினம் இடம்பெற்றது .
You might also like

Leave A Reply

Your email address will not be published.