;
Athirady Tamil News

மோதலில் உயிரிழந்த சிறை அதிகாரிகள்; கண்கலங்க வைத்த புகைப்படங்கள்

0

நீர்கொழும்பு சிறைசாலையில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த 7 சிறை அதிகாரிகளின் உடலங்கள் வெலிகடை சிறைசாலையில் இன்று வைக்கப்பட்ட நிலையில், கண்கலங்க வைத்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

உயிரிழந்த சிறை அதிகார்காளின் உறவினர்கள் மற்றும் , உடன் வேலை செய்தூர் கதறி அழுத சம்பவம் பார்ப்பவர்களை கலங்க வைத்துள்ளது.

மிக மோசமான மற்றும் கொடூரமானதொரு கலவரம்
கடந்த ஞாயிற்று கிழமை , சிறைசாலையில் போதைப்பொருள் மாஃபியாயின் வெறியாட்டத்தில் இரு கைதிகள் குழுக்களுக்கு இடையே சிறியதாகத் தொடங்கிய வாக்குவாதம், பின்னர் சிறை அதிகாரிகளால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு நிலைமை மோசமடைந்ததுடன் திங்கட்கிழமை வெடித்த கலவரத்தில் நாடெ அதிர்ச்சியடைந்தது.

நீர்கொழும்பு சிறைசாலை கலவரத்தில் இதுவரை 8 சிறை அதிகாரிகள் உயிரிழந்துள்ளதுடன், அதிகாரிகள், கதிகள் உட்பட 100இற்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த கொடூர சிறைச்சாலை மோதலினால் இதுவரை ஏற்பட்ட மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது.

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டுத் துறை அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நானயக்கார மற்றும் அமைச்சின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி ஆயிஷா ஜினசேன ஆகியோர் சிறைச்சாலைக்கு சென்று அஞ்ச்சலி செலுத்தி இருந்தனர்.

இதன்போது அங்கு கூடியிருந்த சக சிறைச்சாலை அதிகாரிகள் சம்பவம் தொடர்பில் தமக்கு நியாயமான விசாரணை நடத்தப்பட்டு, தகுந்த நீதி பெற்றுத்தரப்பட வேண்டும் என கண்ணீர் மல்க நீதி அமைச்சரிடம் உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதேவேளை நீர்கொழும்பு சிறைச்சாலையில் வெடித்த வன்முறை , இலங்கை சிறைச்சாலை வரலாற்றையே உலுக்கிய 2012ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலை வன்முறைச் சம்பவத்திற்குப் பின்னர் , 14 ஆண்டுகள் கழித்து மிக மோசமான மற்றும் கொடூரமானதொரு கலவரம் இது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.