புங்குடுதீவு ஸ்ரீ சுப்பிரமணிய மகளிர் வித்தியாலய நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பிரமாண்டமான சரஸ்வதி சிலை திறப்பு விழா நிகழ்வு.. (வீடியோ, படங்கள்)
புங்குடுதீவு ஸ்ரீ சுப்பிரமணிய மகளிர் வித்தியாலய நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பிரமாண்டமான சரஸ்வதி சிலை அமைக்கும் பணியானது நிறைவுற்று, இன்றையதினம் (08.07.2026) மதியம் 12.00 க்கு திறப்பு விழா சிறப்புற நடைபெற்றது.
மேற்படி நிகழ்வானது பாடசாலை அதிபர் திருமதி.வனிதா அருட்செல்வன் தலைமையில் புங்குடுதீவு மண்ணின் மைந்தரும், முன்னாள் வடமாகாண பிரதம செயலாளருமான திரு.இலட்சுமணன் இளங்கோவன் பிரதம விருந்தினராகவும், புங்குடுதீவு மண்ணின் மைந்தரும் முன்னாள் அதிபருமான திரு.எஸ்.கே.சண்முகலிங்கம் சிறப்பு விருந்தினராகவும் தீவக வலயக் கல்விப் பணியக ஆசிரிய ஆலோசகர்கள் மூவர், முன்னாள் அதிபர் திரு.பஞ்சலிங்கம் ஆகியோர் கௌரவ விருந்தினராகவும் கலந்து கொள்ள ஆசிரிய பெருந்தகைகள், மாணவச் செல்வங்கள், பெற்றோர்கள், கனடாவில் இருந்து திரு.சுரேஷ் மற்றும் லண்டன், சுவிஸ், கனடாவில் இருந்து திருமதி சசிரேகாவின் உறவுகள், பொதுமக்கள் எனப் பெருமளவானோர் கலந்து சிறப்பித்து இருந்தனர்.
முதல்நிகழ்வாக விருந்தினர்கள் வரவேற்க்கப்பட்டு, வித்தியாலயத்துக்கு முன்னாள் உள்ள ஆலயத்தில் இருந்து ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். பின்னர் பெருங்காடு மாரியம்மன் ஆலய குருவால் முறைப்படி பூசைகள் செய்யப்பட்டு, பொங்கல் பொங்கப்பட்டு, திரு.திருமதி பிறேம்ஆனந்தன் சசிரேகா தம்பதிகளினால் சரஸ்வதி சிலையானது திறந்து வைக்கப்பட்டது.
அதேபோல் அதில் நிறுவியிருந்த அமரர்.நடராசா சசிவண்ணன் அவர்களின் நினைவுக்கல் அவரது சகோதரர்கள் அனைவரும் இணைந்து திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது.
மேற்படி வித்தியாலயத்துக்கான பீடம், கட்டிடத்துடன் கூடிய சரஸ்வதி சிலையை தமது சொந்த நிதியில் அமைத்துக் கொடுப்பவர்களும், இவ்வித்தியாலய பழைய மாணவியின் கணவருமான லைகா பிறேம் எனும் திரு.திருமதி.சசிரேகா பிறேம்ஆனந்தன் குடும்பத்தினர் உட்பட விருந்தினர்கள் அனைவராலும் கட்டிடக் கலைஞர்களும், சிற்பக் கலைஞர்களும் கௌரவிக்கப்பட்டனர். அத்துடன் விருந்தினர்களின் உரையுடன் நூற்றாண்டு விழா காணும் புங்குடுதீவு சுப்பிரமணிய மகளிர் வித்தியாலய சரஸ்வதி சிலை திறப்பு விழா சிறப்புற நிறைவேறியது.
*நல்லதே நினைப்போம், நல்லதே செய்வோம், நல்லதே நடக்கும்*
திடீரென புங்குடுதீவு பாடசாலையில் திரண்ட புலம்பேர் உறவுகள் ! லைக்கா உயர் அதிகாரியின் செயல் !
