சீனாவில் கடும் வெள்ளம்: 39 பேர் பலி; 1,30,000 பேர் வெளியேற்றம்!
சீனாவில் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக 39 பேர் பலியாகினர்.
சீனாவின் தெற்குப் பகுதியில் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப்பெருக்கால் இதுவரை 39 பேர் பலியாகினர்.
‘மேசாக்’ புயல் காரணமாக பெய்து வரும் இத்தொடா் மழையால், சீனாவின் 62-க்கும் மேற்பட்ட முக்கிய நதிகளில் வெள்ளநீா் ஆபாயக் கட்டத்தைக் கடந்து பாய்கிறது. இதையொட்டி, அப்பகுதியில் வசித்த 1,30,000 மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனா்.
நான்னிங் நகரில் உள்ள அணை உடைந்ததில் 26 பேர் உயிரிழந்தனர். இதுவே பெரும்பாலால மரணங்களுக்குக் காரணமாகச் சொல்லப்படுகின்றது.
அதேபோல, தைவானின் தென் பகுதியில் பாவி புயல் காரணமாக கனமழை ஏற்பட்டு பல பகுதிகளில் நிலச்சரிவும் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது.
சீனாவில் 5,700 படகுகள் மற்றும் டிரோன்கள் மீட்புப் பணிகளில் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ள நிலையில் மீட்புப் படையினர் தீவிரமாகப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
குயிகாங் நகரில், பல பள்ளிகள் அமைந்துள்ள பகுதியில் சிக்கிய 10,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை மீட்புக் குழுவினர் இன்று மீட்டனர்.
சாலைகள் சீரமைக்கப்பட்டு வரும் வேளையில், 60,000-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.
வெள்ள நீர் வடிந்து வருவதாகச் சொல்லப்படும் நிலையில் அடுத்த 2 நாள்களுக்கு பல இடங்களில் கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையங்கள் தெரிவித்துள்ளன.