20 ஆண்டுகளுக்குப் பிறகு! வரும் நவ.28-ல் பாலஸ்தீனத்தில் தேர்தல்!
பாலஸ்தீனத்தில் வரும் நவம்பர் 28 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என அதிபர் மஹ்மூத் அப்பாஸ் அறிவித்துள்ளார்.
பாலஸ்தீனத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், கிளர்ச்சிப்படையான ஹமாஸ் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. இதையடுத்து, இஸ்ரேலுக்கும் ஹமாஸ் படைக்கும் இடையே நடைபெற்று வந்த தொடர் போரினால், தேர்தல் நடத்தப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டது.
காஸா உள்ளிட்ட பாலஸ்தீனத்தின் அனைத்து பகுதிகளில் வகித்து வந்த பதவிகளில் இருந்து ஹமாஸ் அமைப்பு விலகுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் நவம்பர் 28 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என அதிபர் மஹ்மூத் அப்பாஸ் அறிவித்துள்ளார்.
இதையடுத்து, ஜெருசலேம், மேற்கு கரை மற்றும் காஸா உள்ளிட்ட பாலஸ்தீன பகுதிகளில் தேர்தல் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.