மோசமான பட்டியலில் இடம்பிடித்த இலங்கை! வெளியான காரணம்
ஆசியாவிலேயே மூன்றாவது மிக மோசமான போக்குவரத்து நெரிசல் மிகுந்த நாடாக இலங்கை பட்டியலிடப்பட்டுள்ளது.
உலகின் போக்குவரத்து நெரிசல் குறித்த Numbeoவின் 2026ஆம் ஆண்டுக்கான இடைக்கால அறிக்கையில் இவ்வாறு பட்டியலிடப்பட்டுள்ளது.
இலங்கை 254.5 என்ற போக்குவரத்து குறியீட்டுடன் மூன்றாம் இடத்தில் உள்ளதுடன், நைஜீரியா 320.3 என்ற குறியீட்டுடன் முதலிடத்திலும், கொஸ்டாரிகா இரண்டாம் இடத்திலும் உள்ளன.
குறைந்த போக்குவரத்து நெரிசல்
இதேவேளை, பங்களாதேஷ், கென்யா, எகிப்து, பெரு, ஈரான், இந்தியா மற்றும் கொலம்பியா ஆகிய நாடுகள் முதல் 10 இடங்களுக்குள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், மலேசியா, தாய்லாந்து, சிங்கப்பூர் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள் ஒப்பீட்டளவில் குறைந்த போக்குவரத்து நெரிசல் அளவுகளைப் பதிவு செய்துள்ளன.
பயனர்களிடமிருந்து பெறப்படும் தரவுகளின் அடிப்படையில் Numbeo நிறுவனம் இந்த குறியீட்டை தயாரித்துள்ளது.
போக்குவரத்து நெரிசல் அளவிடல்
பயண நேரம், நெரிசலால் வீணாகும் நேரம், எரிபொருள் திறனின்மை மற்றும் பயணத்துடன் தொடர்புடைய மதிப்பிடப்பட்ட CO₂ வெளியேற்றம் போன்ற காரணிகளின் அடிப்படையில் போக்குவரத்து நெரிசல் அளவிடப்படுகின்றது.
இந்த தரவுகள், இலங்கையில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசல் மற்றும் போக்குவரத்து கட்டமைப்பை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்த்துவதாகவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.