;
Athirady Tamil News

களுத்துறை மாவட்ட செயலகத்தில் இன்று தீப்பரவல்

0

களுத்துறை மாவட்ட செயலகத்தில் மின் கசிவு காரணமாக இன்று தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தீயணைப்புச் சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தீ விபத்து தொடர்பான தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, தீயைக் கட்டுப்படுத்துவதற்காக தீயணைப்பு வாகனம் ஒன்று சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தீயை முழுமையாகக் கட்டுப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், சேத விபரங்கள் தொடர்பான மேலதிக தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.