புங்குடுதீவு 11 ம் வட்டாரத்தில் காப்பாற்றப்பட்ட பசு
புங்குடுதீவு 11 ம் வட்டாரத்தில் காப்பாற்றப்பட்ட பச
நேற்றைய தினம் புங்குடுதீவு பிரதான வீதியில் 11 ம் வட்டாரத்திலுள்ள மக்கிக்குண்டு குளத்தின் பின்பாக காணப்படுகின்ற பற்றைக்காட்டுக்குள் சட்டவிரோதமாக இறைச்சி ஆக்கும் நோக்கத்தில் பசு ஒன்று கட்டி வைக்கப்பட்டிருந்தது.
தீவகம் சிவில் சமூகம் அமைப்பின் உபதலைவர் திரு. கருணாகரன் குணாளன் அவர்களுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய சில இளைஞர்களின் துணையுடன் குறித்த பசு உயிரோடு காப்பாற்றப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் கயிறு மூலமாக தடம் வைத்து கால்நடைகளை பிடித்து இறைச்சியாக்கும் திருடர்கள் தற்போது கம்பி கேபிள்கள் மூலம் தடம் வைக்கும் கொடூரமான முறையை பின்பற்றி கால்நடைகளுக்கு ஆபத்தான முறையில் காயங்களை ஏற்படுத்தி அவற்றை வீழ்த்தி வெட்டி இறைச்சியாக்குகின்ற கீழ்த்தரமான செயற்பாடுகளை சில மனித விசக்கிருமிகள் மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.
மக்கிக்குண்டு குளத்திலிருந்து சுமார் 500 மீற்றர் தூரம் பற்றைக்காடுகளாக இந்த பொதுமக்களுக்கு சொந்தமான காணிகளில் கஞ்சா பதுக்கி விற்பனை செய்தல் போன்ற சட்டவிரோத செயற்பாடுகளும் நடைபெற்றுள்ளன.
