;
Athirady Tamil News

நெல்லுக்கு நிர்ணய விலை குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு

0

நெல் சந்தைப்படுத்தல் சபையினால் விவசாயிகளிடமிருந்து நெல்லைக் கொள்வனவு செய்யும் நடவடிக்கைகளை இன்று (13) திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் 143 கொள்முதல் நிலையங்கள் ஊடாக இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் மஞ்சுள பின்னலந்த தெரிவித்துள்ளார்.

அம்பாறை, உகன பிரதேசத்திலிருந்து உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ள இந்தச் செயற்திட்டத்தின் ஊடாக, விவசாயிகளிடமிருந்து நிர்ணயிக்கப்பட்ட விலையில் நெல்லைக் கொள்வனவு செய்யத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதற்கமைய, ஒரு கிலோ நெல்லுக்காக அரசாங்கத்தினால் விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

அதன்படி நாடு நெல் ஒரு கிலோகிராம் 120 ரூபாவுக்கும், சம்பா நெல் ஒரு கிலோகிராம் 130 ரூபாவுக்கும், கீரி சம்பா நெல் ஒரு கிலோகிராம் 140 ரூபாவுக்கும் கொள்வனவு செய்யப்படவுள்ளன.

இதனிடையே, நெல் சந்தைப்படுத்தல் சபையின் களஞ்சியசாலைகளில் ஏற்கனவே பெருமளவிலான நெல் இருப்பு காணப்படுவதால், இந்தத் தடவை எதிர்பார்க்கப்படும் அறுவடையில் சுமார் 2 சதவீதமான நெல்லை மட்டுமே கொள்வனவு செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.