;
Athirady Tamil News

தாய்லாந்து: கேளிக்கை விடுதியில் தீ விபத்து – பலி எண்ணிக்கை உயர்வு

0

பாங்காக்,

தாய்லாந்து நாட்டின் பாங்காக் புகழ்பெற்ற சுற்றுலா தலங்கள் நிறைந்த பகுதியாகும். பாங்காக்கின் சடுசக் பகுதியில் கேளிக்கை விடுதி உள்ளது. இந்த கேளிக்கை விடுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ விபத்தில் கேளிக்கை விடுதிக்குள் இருந்த 50க்கும் மேற்பட்டோர் சிக்கிக்கொண்டனர். தகவலறிந்து விரைந்து சென்ற தீயணைப்பு மீட்புக்குழுவினர் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். ஆனால் இந்த தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

பலி எண்ணிக்கை 30 ஆக உயர்வு
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பாங்காக் கேளிக்கை விடுதி தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்றுவருபவர்களில் மேலும் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

கேளிக்கை விடுதியில் ஏசியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.