;
Athirady Tamil News

உக்ரைன் – ரஷியா மோதல்; 11 பேர் பலி

0

கீவ்,

உக்ரைன் , ரஷியா போர் இன்று 1,609வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. போர் நிறுத்த முயற்சிகளை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மேற்கொண்டார். ஆனால் முயற்சி தோல்வியடைந்த நிலையில் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

11 பேர் பலி
இந்நிலையில், உக்ரைன் மற்றும் ரஷியா நேற்று மாறிமாறி ஏவுகணை, டிரோன் மூலம் தாக்குதல் நடத்தின. ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் ஜபோரிஷியா நகரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த மோதலில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும், 14 பேர் காயமடைந்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.