;
Athirady Tamil News

சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்! என்ன காரணம்?

0

பாலியல் குற்றச்சாட்டு தொடா்பாக, சா்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ஐசிசி) தலைமை வழக்குரைஞா் கரீம் கான் (56) பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளாா்.

பிரிட்டன் வழக்குரைஞரான கரீம் கான், தன்னுடன் பணியாற்றிய பெண் உதவியாளரை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாகவும், அந்தப் பெண் புகாரளிப்பதைத் தடுக்க முயன்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இது குறித்து கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்றுவந்த விசாரணையின் முடிவில், கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பின்மூலம் அவா் பதவிநீக்கம் செய்யப்பட்டதாக அதிகாரப்பூா்வமாக அறிவிக்கப்பட்டது.

சா்வதேச குற்றவியல் நீதிமன்ற வரலாற்றில் தலைமை வழக்குரைஞா் ஒருவா் பதவி நீக்கம் செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும். சா்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் அதிகாரத்தை முடக்கும் தீவிர நடவடிக்கைகளை அமெரிக்கா முன்னெடுத்து வரும் சவாலான காலகட்டத்தில், இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனினும், இக்குற்றச்சாட்டுகளை கரீம் கான் தொடா்ந்து மறுத்து வந்தாா். மேற்கத்திய நட்பு நாடான இஸ்ரேல் தலைவா்களுக்கு எதிராக பிடியாணை கோரிய முதல் வழக்குரைஞா் கரீம் கான் ஆவாா். கரீம் கானின் பதவி நீக்கத்தால், இஸ்ரேல் பிரதமா் நெதன்யாகு உள்ளிட்டோருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணை அல்லது அதுதொடா்பான வழக்குகள் ரத்து ஆகாது. பிடியாணையைத் திரும்பப் பெறும் அதிகாரம் ஐசிசி நீதிபதிகளுக்கு மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.