;
Athirady Tamil News

பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்து – 27 பேர் பலி

0

அல்ஜியர்ஸ்,

அர்ஜீரியாவில் ஏற்பட்ட பஸ் விபத்தில் 27 பேர் உயிரிழந்தனர்.

வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு அல்ஜீரியா. இந்நாட்டின் செட்டிப் மாகாணத்தில் இருந்து பியோமர்டஸ் மாகாணத்திற்கு இன்று பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் 66 பேர் பயணம் செய்தனர்.

27 பேர் பலி

இந்நிலையில், பியோமர்டஸ் மாகாணத்தின் எல் கர்மா நகர் அருகே மலைப்பாங்கான பகுதியில் பஸ் சென்றுகொண்டிருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 27 பேர் உயிரிழந்தனர். மேலும், 39 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.