;
Athirady Tamil News

ஜப்பானில் நிரந்தரமாகக் குடியேறும் வெளிநாட்டினருக்கு முக்கிய அறிவிப்பு

0

வெளிநாட்டினருக்கான நிரந்தர வசிப்பிட அனுமதி கட்டணத்தை 20 மடங்காக உயர்த்த ஜப்பான் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த நடவடிக்கை நேற்று (01.10.2026) முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நிரந்தர வசிப்பிடக் கோரிக்கை
நாட்டில் அதிகரித்து வரும் வெளிநாட்டு மக்கள் தொகையை நிர்வகிக்கும் நோக்கில் ஜப்பானிய அரசாங்கம் அறிமுகப்படுத்திய குடிவரவுக் கொள்கைகளில் செய்யப்பட்ட திருத்தங்களின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

இதற்கமைய, வெளிநாட்டினருக்கான நிரந்தர வசிப்பிட அனுமதி கட்டணம் 10,000லிருந்து 200,000ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக ஜப்பானிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

மேலும், நிரந்தர வசிப்பிடத்தை நாடுபவர்கள், ஜப்பானிய மொழித் திறன் உட்பட பல அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் வெளிநாட்டு அறிக்கைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.