;
Athirady Tamil News

உக்ரைன் தாக்குதல்களால் மின்சாரமின்றித் தவிக்கும் கிரிமியா மக்கள்

0

உக்ரைன் நடத்திவரும் தொடர் தாக்குதல்களால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு அவதிப்படும் கிரிமியா தீபகற்பத்தின் மஸ்ந்திரா நகரில், மக்கள் சூடான உணவைப் பெற்றுக்கொள்வதற்காக வீதிகளில் நீண்ட வரிசையில் காத்துநிற்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

ரஷ்யா கடந்த 2014 ஆம் ஆண்டு உக்ரைனிடம் இருந்து இணைத்துக் கொண்ட கிரிமியா நகரில், மின் நிலையங்கள் மீதான உக்ரைனின் தாக்குதல்களால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

உக்ரைனின் தொடர் தாக்குதல்
இதனால் மஸ்ந்திரா நகராட்சி நிர்வாகம் சார்பில் பெருமளவில் சமையல் வேலைகள் செய்யப்பட்டு, தினசரி சுமார் 200 பேருக்கு இலவசமாகச் சூடான உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

பல நாட்களாக மின்சாரமின்றித் தவித்த தங்களுக்கு இந்தச் சமையல் மையங்கள் பெரிதும் ஆறுதலாக உள்ளதாக உள்ளூர் மக்கள் வேதனைத் தெரிவித்துள்ளனர்.

தனது நாட்டின் நகரங்கள் மீதான தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ரஷ்யா மற்றும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களுக்குள்ளும் போரைக் கொண்டு செல்வதாக உக்ரைன் தரப்புத் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.