;
Athirady Tamil News

அமைச்சரின் பெயரில் பெரும் பணமோசடி – பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை

0

கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்கவின் பெயரில் இடம்பெறும் மோசடி தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரதி அமைச்சரை போல் ஆள்மாறாட்டம் செய்து மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் குறித்து பொதுமக்கள் விளிப்புடன் இருக்குமாறு பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்கவின் அலுவலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்குமாறு அறிவுறுத்தல்
இந்த அறிவிப்பின்படி, ஒரு தனிநபர் அல்லது குழு, பிரதி அமைச்சராக நடித்து தொலைபேசி அழைப்புகள் செய்து பணம் கோருவதோடு, பிற மோசடி நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதாக முறைப்பாடுகள் வந்துள்ளன.

அத்தகைய நபர்களுக்கு எந்த பணத்தையும், தனிப்பட்ட தகவல்களையும், ஆவணங்களையும் வழங்க வேண்டாம் என்று பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

சந்தேகத்திற்கிடமான தொலைபேசி அழைப்புகள் அல்லது செய்திகளை பெறுபவர்கள் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையம் அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.