;
Athirady Tamil News

இளம் வயது திருமணம், முறையற்ற தொடர்புகளுக்கு எதிராக விழிப்புணர்வு

0
இளம் வயது திருமணம், முறையற்ற தொடர்புகளுக்கு எதிராக விழிப்புணர்வுசாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜம்இய்யதுல் உலமா கிளை ஏற்பாடு; பொலிஸ் பொறுப்பதிகாரி, காழி நீதிபதி உட்பட பலர் பங்கேற்பு!

பாறுக் ஷிஹான்இளம் வயது திருமணங்கள் மற்றும் முறையற்ற ஆண்-பெண் தொடர்புகள் சம்பந்தமான சிறப்பு விழிப்புணர்வுக் கூட்டமொன்று, அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சாய்ந்தமருது மாளிகைக்காடு கிளையின் ஏற்பாட்டில் கடந்த சனிக்கிழமை (01) மாலை கிளையின் காரியாலயத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.

கிளையின் கௌரவ தலைவர் அஷ்ஷேய்க் M.M. மீரா ஸாஹிப் சலீம் (ஷர்க்கி) தலைமையில் நடைபெற்ற இக்கூட்டம், கௌரவ செயலாளர் அஷ்ஷேய்க் நப்றாஸ் ஹனீபா (ரஹ்மானி) அவர்களின் நெறிப்படுத்தலில் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.

சமுதாயத்தின் பாதுகாப்பையும், எதிர்கால சந்ததியினரின் நல்வாழ்வையும் கருத்திற் கொண்டு ஒழுங்கு செய்யப்பட்ட இக்கூட்டத்தில், சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, காரைதீவு பிரதேச செயலாளர் சார்பான பிரதிநிதிகள், கிராம உத்தியோகத்தர்கள், சாய்ந்தமருது காழி நீதிபதி, விவாகப் பதிவாளர்கள், கலாச்சார உத்தியோகத்தர், இணக்க சபை தவிசாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் தலைவர் மற்றும் பொருளாளர், மாளிகைக்காடு அந்நூர் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் தலைவர், நிகாஹ் நடாத்தி வைக்கும் இமாம்கள் மற்றும் ஜம்இய்யாவின் கௌரவ உறுப்பினர்கள் எனப் பல முக்கியஸ்தர்களும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் கலந்துகொண்டு தமது பூரண ஒத்துழைப்பை நல்கிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சாய்ந்தமருது மாளிகைக்காடு கிளை ஊடகப் பிரிவு தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 
You might also like

Leave A Reply

Your email address will not be published.