;
Athirady Tamil News

பெரு நாட்டில் சுற்றுலாப் பயணிகள் சென்ற விமானம் விபத்து- 13 பேர் பலி

0

பெருவில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற விமானம் விபத்துக்குள்ளானத்தில் 13 பேர் பலியாகினர்.

பெரு நாட்டில் புகழ்பெற்ற நாஸ்கா கோடுகளைப் பார்வையிட இகா நகரத்திலிருந்து ஐரோப்பிய சுற்றுலாப் பயணிகளுடன் விமானம் சனிக்கிழமை புறப்பட்டுச் சென்றது.

இந்த விமானம் நாஸ்கா நகரிற்கு வெளியே உள்ள வயல்வெளியில் திடீரென விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் 13 பேர் பலியானதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பலியானவர்களில் 7 பேர் இத்தாலி, 2 பேர் ஸ்பெயின், 2 பேர் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று பெருவின் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. மற்ற இருவர் விமானி ஆவர்.

இந்த விபத்துக்கு அதிபர் கெய்கோ புஜிமோரி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் பெரு அதிகாரிகள் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.