;
Athirady Tamil News

வெள்ளப்பெருக்கு;நேபாள நீர்மின் நிலையங்களில் 933 பேர் சிக்கியிருக்க வாய்ப்பு – தேடும் பணி தீவிரம்

0

காத்மாண்டு,

நேபாள நீர்மின் நிலையங்களில் 900-க்கும் மேற்பட்டோர் சிக்கி இருக்க வாய்ப்புள்ளதாக அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

பனிச்சரிவு
நேபாளத்தின் திபெத் எல்லையையொட்டிய பகுதியில் கடந்த 26-ந்தேதி ஏற்பட்ட பனிச்சரிவு காரணமாக போடேகோஷி நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, மத்திய நேபாளத்தை மொத்தமாக உருக்குலைத்து உள்ளது.

நீர்மின் நிலையங்கள், பாலங்கள், சாலைகள், வாகனங்கள். வீடுகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான கட்டிடங்களை அடித் துச்சென்றது. அத்துடன் அந்த பிராந்தியம் முழுவதும் சேறு மற்றும் சகதியால் நிறைத்துள்ளது.

8 மாவட்டங்கள் பாதிப்பு
சுனாமி பேரலைகளைப்போல தாக்கிய இந்த பெருவெள்ளத்தில் 8 மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். அத்துடன் ஏராளமானோர் அடித்துச்செல்லப்பட்டு மாயமாகி உள்ளனர். இதில் உள்ளூர் மக்களை தவிர இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் அடங்கியிருப்பதால் அந்தந்த நாடுகளிலும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

தேடும் பணி தீவிரம்
வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டவர்களில் பலரும் உயிரிழந்துள்ளனர். அவர்களின் உடல்கள் அடுத்தடுத்து மீட்கப்பட்டு வருகின்றன. இதனால் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தநிலையில்,வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கி உள்ளது. காணாமல் போன 2,500-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

6 நீர்மின் நிலையங்கள்
இந்நிலையில், நேபாளத்தின் 6 நீர்மின் நிலையங்களில் 933 தொழிலாளர்கள் சிக்கியிருக்க வாய்ப்புள்ளதாக அந்நாட்டு பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதனிடையே, உயிரிழந்தவர்களின் உடல்களை பாதுகாப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகக் கூறி அவர்களின் உடல்களை அடையாளம் காண்பதற்கு முன்பே குழிகளில் அடக்கம் செய்யும் நடவடிக்கைகளை சித்வான் மாவட்ட அதிகாரிகள் தொடங்கி உள்ளனர். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், இது மத சடங்குகள் மற்றும் மரபுகளை புறக்கணிப்பதாகஅவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.